بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரமலான் அறிவுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி

               அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்,  14.10. 2012 (ஞாயிற்றுக்கிழமை)  காலை 10 மணி முதல் லுஹர் வரை ரமலான் அறிவுப் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சி மஸ்ஜிதுல் முபாரக்   வளாகத்தில்  உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது  .

                       மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சியில்     சகோ. பஷீர் அஹ்மத்  உமரீ  அவர்கள்  ”மார்க்க அறிவின் அவசியம்” என்ற   தலைப்பிலும் சகோ. எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள்  ”இறையியல் கல்வி” என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்.          இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மேலப்பாளையம் பஸ்லுல் இலாஹி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

                      இந்த அறிவுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு முறையே ரூ15000 (பதினைந்தாயிரம்), ரூ10000(பத்தாயிரம்), ரூ5000(ஐந்தாயிரம்) பெறுமானமுள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் கலந்து கொண்ட மீதமுள்ள 72 நபர்களுக்கு ரூ 300(முந்நூறு) பெறுமானமுள்ள நான்ஸ்டிக் தவா ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டது. 

            நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து பயனடைந்தார்கள்.

              இதற்கான பொருளாதாரத்தை வழங்கிய சகோதரர் சுக்கன் பஸ்லுர் ரஹ்மான் அவர்களுக்கு மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


 















Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment