பேட்டை ரைஸமில் திடல் நடைபெற்ற இத்தொழுகைக்கு 01.09.2012 சனிக்கிழமை காலை 8.30 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் நூற்றுக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத் துவங்கினர். 9.15 மணி அளவில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்தைச் சார்ந்த எஸ்.ஏ.பஷீர் அஹ்மத் உமரீ அவர்கள் மழைத் தொழுகையின் அவசியத்தைக் குறித்து விவரித்தார். நீங்கள் செய்த பாவங்களை அல்லாஹ்விடத்தில் முறையிட்டு அதற்காக மன்னிப்புக் கேளுங்கள். அல்லாஹ்வே உன்னுடைய மழை என்ற பேரருளை பொழிந்து எங்களையும் கால்நடைகளையும் மற்றும் உயிரினங்களையும் வாழ வைப்பாயாக என்று உள்ளம் உருகப் பிரார்த்தியுங்கள் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவர் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் அனைவரும் தங்களது இரு கைகளை புறங்கைகள் வானை நோக்கி உயர்த்தி பிரார்த்தித்தனர். தொடர்ந்து தங்களது மேலாடையை புரட்டிப் போட்டு மீண்டும் பிரார்த்தித்தனர். அதைத் தொடர்ந்து மழைத் தொழுகை நடத்தினார். எம்எம்ஜே தலைவர் ஸைபுல்லாஹ், டிஎம்.ஜபருல்லாஹ், முஹம்மத் கோரி, பாவா, அஹமத் கபீர், ஹாஜா மைதின், முஹிப்புல்லாஹ் உமரி, ஏஆர்எஸ்.பாதுஷா, சுங்காமுத்து மைதின், நூர் முஹம்மத், விஸ்வா காத், யூசுப், சேகனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அக்ஸா அறக்கட்டளை நிர்வாகம் சிறப்பாகச் செய்தது.
கடையநல்லூர் நகரக் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவன் அவர்கள் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அக்ஸா அறக்கட்டளை நிர்வாகம் சிறப்பாகச் செய்தது.
கடையநல்லூர் நகரக் காவல்துறை உதவி ஆய்வாளர் சிவன் அவர்கள் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இப்படிக்கு,
ஈ.கே.எம்.எஸ்.பாவா
தலைவர்
0 comments:
Post a Comment