தமிழகத்தில் ஏகத்துவச் சிந்தனையாளர்கள் கடந்த 30 ஆண்டுகளாக பல அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வந்தனர். அந்த அமைப்புகளை வழி நடத்துகின்றவர்களின் சுய நலப் போக்கால் வெறுத்துப் போய் அவற்றை விட்டு வெளியேறினர். அவர்கள் ஏகத்துவப் பணிகளை தங்கள் சக்திக்குட்பட்டு இன்று வரை செய்து வருகின்றனர்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளையும் குர்ஆன் மற்றும் இறைத்தூதரின் வழிகாட்டுதல்களையும் தங்கள் வாழ்வியலாகக் கொள்வதோடு பிற முஸ்லிம்களை அதன் பால் அழைக்கும் பணிகளை பிரத்தியேகமாகச் செய்கின்றனர்.
இதை தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் தொடர்ந்து தொய்வின்றி செய்திட வேண்டும் என்பதற்காக சிதறிக் கிடக்கும் ஏகத்துவச் சிந்னையாளர்கள் பல கட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர். இறுதியில் 22.04.2012 ஞாயிறு அன்று திருச்சி டிஏன்டிடிக்குச் சொந்தமான தவ்ஹீத் பள்ளிவாசலில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஒன்று கூடி எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர்.
• திருச்சி டிஏன்டிடிக்குச் சொந்தமான தவ்ஹீத் பள்ளிவாசலை மையமாக வைத்து ஏகத்துவப் பிரச்சார மையம் என்ற பெயரில் செயல்படுவது.
• மாநில தலைவராக காரைக்கால் ஸலீம் மாநில செயலாளராக மன்னார்குடி அமீர் ஹம்ஸா மாநில பொருளாளராக திருச்சி நஸீர் ஹுஸைன் மாநில துணைத் தலைவராக கடையநல்லூர் முஹம்மது ஜபருல்லாஹ் மாநில துணைச் செயலாளராக பெரம்பலூர் அப்துல் கலாம் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
• முஸ்லிம்களுக்கு மத்தியில் நிலவும் இணை வைத்தல், தனிமனித வழிபாடு, இயக்க வெறி, மூடப்பழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள், வட்டி, வரதட்சணை, லஞ்ச லாவண்யம் போன்ற சமூகக் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
• ஏகத்துவச் சிந்தனையாளர்கள் தத்தமது ஊர்களில் எந்தெந்த பெயர்களில் அமைப்பு சாராமல் செயல்பட்டனரோ அந்தப் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட்டுக் கொள்வது. போன்ற முடிவுகள் எட்டப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முக்கியஸ்தர்கள், பொறுப்பாளர்கள், அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.





0 comments:
Post a Comment