ஹஜ் பயணம் செல்வோருக்கு வசதியாக மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் 8ம் தேதி பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
ஹஜ் பயணம் செய்ய விரும்பும் அனைத்துப் பயணிகளுக்கும் அதிவிரைவாக பாஸ்போர்ட் வழங்குவதை உறுதி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் மாநில ஹஜ் குழுவுடன் இணைந்து எடுத்து வருகிறது.
ஹஜ் பயணம் செய்ய விரும்பும் அனைத்துப் பயணிகளுக்கும் அதிவிரைவாக பாஸ்போர்ட் வழங்குவதை உறுதி செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் மாநில ஹஜ் குழுவுடன் இணைந்து எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நிகழ் 2012ம் ஆண்டு ஹஜ் பயணிகளுக்கு தாமதம் இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கும் முயற்சியாக மார்ச் 8ம் தேதி வியாழக்கிழமை மதுரை பாரதி உலா வீதி பந்தயதிடல் சாலையில் அமைந்துள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் மேளா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹஜ் பயணம் செய்ய விரும்பும் பயணிகளின் விண்ணப்பங்கள் ஏதேனும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிலுவையில் இருந்தால் தங்களுடைய அனைத்து உண்மைச் சான்றிதழ்கள் ஆவணங்களுடன் பாஸ்போர்ட் மேளாவில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதற்கான முன்பதிவை rpo.madurai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 0452-2522070 என்ற மின்னணு தொலைபேசி (பேக்ஸ்) மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment