بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தீன்குலப் பெண்ணே!

                                                                                                                     எம். அப்துல் ஜலீல் மதனீ

அன்பிற்குரிய தாய்மார்களே! சகோதரிகளே! பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களோடு தொகுத்துள்ளோம். இதனைக் கடைபிடித்து வாழக்கூடிய நன்மக்களாக அல்லாஹ் நாம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

இவ்வுலகம் முழுவதும் செல்வமாகும். இவ்வுலகக் செல்வங்களில் மிகவும் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: முஸ்லிம் 2668)

வீதியில் செல்லும் போது பார்வைகளைத் தாழ்த்திச் செல்லவேண்டும்
தமது பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!                                                 (அல்குர்ஆன் 24:31)

பர்தா அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்
அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும் .                                                   
(அல்குர்ஆன் 33:59)
நபியே!(முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அவியப்படவும் தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது என்று கூறுவீராக! அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.                                  
(அல்குர்ஆன் 33:59)

தன்னுடைய தலையில் ஒட்டகத் திமிலைப் போன்று (கொண்டையிட்டு) ஒய்யாரமாக அரை குறை அடை அணிந்து பிறரைக் கவரும் வண்ணம் (உடலழகைக் காட்டி) ஒய்யாரமாகத் தளுக்கிக் கொண்டும் செல்லும் பெண்கள் சுவர்க்கம் புக மாட்டார்கள் (ஐம்பது ஆண்டுகள் அல்லது) எவ்வளவு ஆண்டுகள் பயணம் செய்து அடையும் இடத்தில் (ஒருவன்) இருந்தாலும் அங்கு சுவர்க்கத்தின் நறுமணம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் இப்பெண்கள் அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 3971)

கால்களில் ஒலி எழுப்பும் சலங்கைகள் அணிந்து வெளியில் செல்லக்கூடாது
   அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெள்ளியடைவீர்கள்.              
                (அல்குர்ஆன் 24:31)

பள்ளிவாசலுக்கு செல்லும் போது வாசனைப் பொருட்களை பயன் படுத்தக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெண்களாகிய நீங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள்!
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 759)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்து கொள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: முஸ்லிம் 758)

அந்நிய ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.                                  
(அல்குர்ஆன் 33:32,33)

தேவையில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியக் கூடாது
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும் உங்களை முழுiயாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.     
   (அல்குர்ஆன் 33:32,33)

ஆணும் பெண்ணும் தனித்திருக்கக்கூடாது
ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர ஒரு பெண் மணமுடிக்காத நெருங்கிய ஆணுடன் தவிர பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி)  நூல்: முஸ்லிம் 2391)

பெண்கள் தவிர்க்க வேண்டியவை
பச்சை குத்திவிடும் பெண்கள் பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிக் கொள்ளும் பெண்கள் அழகிற்காக அரத்தால் தேய்த்து தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள் (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் ஆகியோரின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரி 4886)

ஒட்டு (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: புகாரி 4887)

தனியாக பயணம் செய்வதற்குரிய நிபந்தனை
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஒரு இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1088)

பெண்களே அதிகமாக தர்மம் செய்வீர்
நபி (ஸல்) அவர்கள் பெண்கள் சமூகமே! தான தர்மம் செய்யுங்கள் ஏனெனில் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள் தான் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன்? என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு நீங்கள் அதிகமாக சாபமிடுகிறீர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள், உங்களுக்கு மார்க்கக் கடமையும் அறிவும் குறைவுதான் ஆனால் அறிவில் உறுதி கொண்ட கணவனைக் கூட சறுகச் செய்து விடுகிறீர்கள். இத்தன்மை கொண்டவர்களாக உங்களை தவிர வேறு யாரையும் நான் காணவில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: புகாரி 304)
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment