மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத், சார்பாக 16.01.2012 (திங்கள்கிழமை) அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி கடையநல்லூர் தக்வா பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டித் தலைவர் க. அ.சேகுதுமான் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சகோதரர் பஷீர் அஹ்மத் உமரி அவர்கள்
இஸ்லாம் கூறும் நட்பு என்ற தலைப்பிலும் ஜாமியா நஜாஹ் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர் சகோதரர் இத்ரிஸ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் சகோதரர் மன்சூர் அவர்கள் ஹலால் ஹராம் பேணுதல் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் காஜா அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மாணவர்களும் பொதுமக்களும் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து பயனடைந்தனர்.
நிகழ்ச்சிக்கு இடையே கலந்து கொண்ட அனைவருக்கும் துஆ மனன பயிற்சியும் நடைபெற்றது. 













0 comments:
Post a Comment