بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

நபிகளாரின் இறுதி நாட்கள் தரும் படிப்பினை!

எஸ்.ஏ. பஷீர் அஹ்மத் உமரீ
கடையநல்லூர்.
               நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸபர் மாதத்தின் இறுதியில் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். பிறகு அந்த நோயால் ரபிஉல் அவ்வல் 12 ல் மரணமடைந்தார்கள். அவர்களது நோயின் கடுமை பற்றி அவர்கள் கூறும்போது 'உங்களில் இருவர் படும் வேதனையை நான் (ஒருவன்) பட்டுக்கொண்டிருக்கின்றேன்' (புகாரி 5648) என்று கூறினார்கள். மரண தருவாயில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் எண்ணமும் பேச்சும் எப்படி அமைந் திருக்கும் என்பதை நாமெல்லாம் அறிந்திருக்கிறோம். தன்னுடைய சொத்திலிருந்து யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றித்தான் போசுவார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ தமது மரண தருவாயிலும் தமது சமுதாயத்தைப் பற்றி அக்கரை கொண்டிருந்தார்கள். தமக்குப் பின்னால் தமது சமுதாயம் வழிதவறிவிடக் கூடாதுளூ வந்த வழியே திம்பிச் சென்று விடக்கூடாது என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள். அதனால் மரணம் நெருங்கிவிட்ட அந்த நேரத்திலும் தமது சமுதாயத்திற்குப் முக்கியமான அறிவுரைகளையும், பல எச்சரிக்கைகளையும் செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றையும் அவற்றிலிருந்து நாம் பெறும் படிப்பினைகளையும் கீழே தருகிறோம்.


              நபி(ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது) ஒரு நாள் மக்களுக்கு உரை நிகழ்த் தினார்கள். அந்த உரையில், 'அல்லாஹ் ஓர் அடியானுக்கு இவ்வுலகத்தினுடைய இன்பங்கள் வழங்கப் படுதல் அல்லது தன்னிடம் உள்ளது- இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படிக் கூறினான். அந்த அடியார் அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்' என்று கூறினார்கள். (அதைக் கேட்ட) அபூபக்கர் (ரலி) அவர்கள் (நபியவர்களின் இறப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்து) அழுதார்கள். '(அல்லாஹ்வின் தூதரே!) எங்கள் தாய் தந்தையர்களை தங்களுக்கு அர்ப்பணித்திருக்கின்றோம்.' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள்தான், விரும்பியதைத் தேர்வு செய்யும் சுய அதிகாரம் வழங்கப்பட்டவராக இருந்தார்கள். எங்களில் அபூபக்கர் தான் இது குறித்து அதிகம் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களி லேயே நட்பிலும் செல்வத்திலும் எனக்கு பேருதவியாக இருந்தவர் அபுபக்கர்தான். நான் ஒருவரை உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றிருந்தால் அபூபக்கரை உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவம் (எனக்கும் அவருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கின்றது. (எனது இந்தப்) பள்ளிவாசலில் அபூபக்கரின் வாசலைத் தவிர எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்;' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்லிம் 2382
                   நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது தம் முகத்தின் மீது ஒரு போர்வையைத் தூக்கிப் போட்டுக் கொள்ளலானார்கள். மூச்சுத் திணறல் ஏற்பட்டால் தம் முகத்தை விட்டு அதை விலக்கிக் கொள்வார்கள். அவர்கள் இந்நிலையில் இருக்கும்போது, 'யூத கிறிஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்' என்று அவர்கள் செய்ததைக் குறித்து (நீங்களும் அதுபோல் செய்து விடாதீர்கள் என்று) எச்சரித்தவாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 4444, முஸ்லிம் 531
                     நபி(ஸல்) அவர்கள் (தாம் இறப்பதற்கு முன்) நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்கள் அவர்களிடம் (ஏதோ) பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது உம்மு சலமா (ரலி) அவர்களும், உம்மு ஹபீபா (ரலி) அவர்களும் அபிசீனிய நாட்டில் தாங்கள்; கண்ட கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கüடம் கூறினார்கள்.  அதில் தாங்கள் கண்ட உருவப்படங்கள் குறித்தும் குறிப்பிட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவர்கள் எத்தகைய மக்கள் எனில், அவர்கüடையே 'நல்ல மனிதர்' ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் அந்த உருவங்களை வரைந்து விடுவார்கள். இத்தகை யோர்தாம் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிகவும் மோசமானவர்கள்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் 528
                உங்கள் வீடுகளை அடக்கத்தலமாக ஆக்கிவிடாதீர்கள். என்னுடைய அடக்கத்தலத்தை திருவிழா கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள். என் மீது ஸலவாத்து சொல்லுங்கள். ஏனெனில் நீங்கள் கூறும் ஸலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடைந்துவிடும் என நபி(ஸல்) அவர்கள் (தமது மரண தருவாயில்) குறிப்பிட்டார்கள். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத் 2042
          இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி(ஸல்) அவர்கள் (காய்ச்சலால்) சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்கüடம் சென்றேன். 'அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடுமையாக சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே!' என்று கேட்டேன். நபி(ஸல்)அவர்கள், 'ஆம்;! உங்களில்; இருவர் படும் வேதனையை நான் (ஒருவன்) அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்' என்று கூறினார்கள். அதனால் உங்களுக்கு இரண்டு கூலி கிடைக்கும்! (அப்படித்தானே?) என்றேன். நபி(ஸல்)அவர்கள், 'ஆம்;! அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவருடைய பாவங்களை உதிர்த்துவிடுவான். மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று! என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 5648
                ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் மீது ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையானபோது நானே அவற்றை ஓதி அவர்கள் மீது ஊதிக்கொள்வேன். அவர்களுடைய கரத்திற்கு இருக்கும் பரகத்- அருட்பாக்கியத்திற்காக அவர்களுடைய கையாலேயே (அவர்கள் மீது) தடவிவிடுவேன்.
நூல்: புகாரி 5735
                ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நோய் வாய்ப்பட்டிருந்த தம் தந்தை) நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். அவர்களது நடை, நபி(ஸல்) அவர்களுடைய நடையைப் போன்றி ருந்தது. அப்போது, நபி (ஸல்) அவர்கள், 'வருக! என் மகளே!' என்று அழைத்து தம் வலது பக்கமோ இடது பக்கமோ அமர்த்திக் கொண் டார்கள். பிறகு, அவர்கüடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைச் சொன் னார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா(ரலி) அவர்கள் அழுதார்கள். நான் அவர்கüடம், 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கüடம் இரகசியமாக எதையோ சொல்ல, அதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். நான், 'இன்றைக்குப் போல் துக்கம் கலந்த ஒரு மகிழ்ச் சியை (எப்போதும்) நான் பார்த்ததில்லை' என்று சொல்லிவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் என்ன சொன் னார்கள்?' என்று ஃபாத்திமா விடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்களுடைய இரகசியத்தை நான் வெளிப்படுத்தப்போவ தில்லை' என்று கூறினார்கள். இறுதியில் நபி (ஸல்) அவர்கள் இறந்த போது ஃபாத்திமா (ரலி) அவர் கüடம் நான் (அந்த இரகசியம் பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் என்னிடம், '(வானவர்) ஜிப்ரீல் என்னிடம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (ஆனால்) இந்த ஆண்டு அவர்கள் என்னிடம் அதை இரு முறை ஓதிக் காட்டினார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட (தைக் குறிப்ப) தாகவே அதை நான் கருதுகிறேன். என் வீட்டாரில் என்னை முதலில் வந்தடையப் போவது நீதான்' என்று சொன்னார்கள். ஆகவே, நான் அழுதேன். உடனே, அவர்கள், 'சொர்க்கவாசிகளில் பெண்கüன் தலைவியாக அல்லது இறைநம்பிக்கையாளர்களில் பெண்கüன் தலை வியாக இருப்பது உனக்கு திருப்தியில்லையா?' என்று கேட்டார்கள். அதைக் கேட்டு (மகிழ்ச்சியால்) நான் சிரித் தேன்' என்று பதிலüத்தார்கள்.
நூல்: புகாரி 3624
படிப்பினைகள்:
                 மேற்கண்ட நபி (ஸல்) அவர்களது முக்கியமான அறிவுரைகளிலும் எச்சரிக்கைகளிலும் நம் சமுதாயத் திற்குப் பல்வேறு படிப்பினைகளும் பாடங்களும் உள்ளன. அவற்றை கீழே தருகிறோம்.
1- முதலாவதாக நபி (ஸல்) அவர்களைப் போல ஒவ்வொரு முஸ்லிமும் இவ்வுலகில் உள்ள இன்பங்களை விடவும் மறுமையில் உள்ள இன்பங்களுக்கு அதிக ஆர்வம் காட்ட வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அழிந்து போகக்; கூடியவை. மறுமையின் பேறுகளே நிரந்தரமானவை. ஒரு முஸ்லிம் இவ்வுலகில் நீடித்திருக்கின்ற ஒவ்வொரு நேரமும் மறுமையில் அவனது அந்தஸ்துகiளை உயர்த்துவதற்காகப் பாடுபட வேண்டும். நாளைக்கே அவனுக்கு மரணம் ஏற்பட்டாலும் நபி(ஸல்) அவர்களைப் போல சந்தோசமாக மரணத்தைத் தழுவுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
2- அபூபக்கர் (ரலி) அவர்களின் சிறப்பு இங்கு உணர்த்தப்படுகிறது. எல்லா நேரத்திலும் எல்லா வகையிலும் நபி(ஸல்) அவர்களுக்கு உறுதுணையாக நின்றவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது அவர்களின் தலைக்கு விலை பேசப்பட்ட நேரத்தில் நபியவர்கள் தன்னந்தனியாக மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்ய நேர்ந்தபோது அவர்களுடன் இருந்தவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள். ஸவ்ர் குகையில் நபியவர்கள் பதுங்கி இருந்த போதும் அவர்ளுடன் இருந்தவர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களே.
3- 'அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணம்!' என்று நபித்தோழர்கள் நபியவர்களிடம் வாயளவில் மட்டும் சொல்லவில்லை. மாறாக அவர்கள் தங்கள் பிள்ளைகள், தங்கள் பெற்றோர், தங்களின் மனைவியர் மற்றும் பிற மக்கள் அனைவரை விடவும், ஏன் தங்கள் உயிரை விடவும அதிகமாக நபி(ஸல்) அவர்களை உண்மையாகவே நேசித்தார்கள். மற்ற எல்லாவற்றையும் விட நபி(ஸல்) அவர்களுக்கு முன்னுரிமை வழங்கினார்கள். இந்த நிலை ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் வர வேண்டும். ஏனெனில். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு அவருடைய  தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனை வரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் முஃமினாக மாட்டார். அறிவிப்பவர்: (ரலி), நூல்: முஸ்லிம் 15
4- கப்ருகளில் வழிபாடு நடத்துவது, அவற்றுக்குத் திருவிழா கொண்டாடுவது கப்ருகளில் கட்டடங்களை எழுப்புவது, பள்ளிவாசல்களில் கப்ருகளை ஏற்படுத்துவது, அங்கே நல்லடியார்களின் படங்களை வைப்பது ஆகிய அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இது விசயத்தில் சமுதாயம் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்று தமது இறுதி நேரத்திலும் எச்சரித்துள்ளார்கள். உலகில் நபி(ஸல்) அவர்களின் கப்ருக்கே திருவிழா கிடையாது என்றால் வேறு யாருடைய கப்ருக்குத்தான் திருவிழா கொண்டாட முடியும் என்பதை சமுதாயம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
5- முஸ்லிம்கள் குர்ஆனைக் கற்று அவற்றைத் தங்கள் வீடுகளில் ஓதி வர வேண்டும். முஸ்லிம் வீடுகளில் குர்ஆன் ஓதும் பழக்கம் இருக்க வேண்டும். குர்ஆன் ஓதப்படாத வீடுகள் கப்ருகளுக்குச் சமம். ஏனெனில் கப்ருகளில்தான் குர்ஆன் ஓதப்படக் கூடாது.
6- முஸ்லிம்கள் ஐவேளைத் தொழுகைகளை முறையாகப் பேணி ஜமாஅத்துடன் தொழுது வர வேண்டும். ஏனெனில் ஒரு மனிதன் இறைநிராகரிப்பிலும் இணைவைப்பிலும் இருக்கிறான் என்பதன் அடையாளம் தொழு கையை விடுவதாகும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 256)
7- அடிமைகளை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தி யுள்ளார்கள். தற்போது அடிமை முறை இல்லாததால் அந்த இடத்தில் வேலைக்காரர்களும், தொழிலாழர்க ளும் உள்ளனர். ஆகவே அவர்களை நல்ல முறையில் நடத்த வேண்டும்.
8- முள் குத்துவது உட்பட ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் எந்தத் துன்பமானாலும் அதற்குப் பகரமாக அல்லாஹ் அவனது பாவங்களை மன்னித்து விடுகின்றான்.
9- குர்ஆன் வசனங்களைக் கொண்டு ஓதிப் பார்ப்பது கூடும். அதுவும் நபியவர்கள் கற்றுத் தந்த வசனங் களைக் கொண்டு மட்டும்தான். அல்ஹம்து சூரா, குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் பலக், குல் அவூது பிரப்பிந்நாஸ் ஆகிய அத்தியாயங்களைக் கொண்டு ஓதிப் பார்க்க நபி(ஸல்) அனுமதித் துள்ளார்கள். நோயாளி தனக்குத் தானே ஓதிப்பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த அத்தியாயங்களை ஓதத் தெரியாத வருக்கு, அல்லது ஓத முடியாத நிலையில் இருப்பவருக்கு அடுத்தவர் ஓதிப் பார்க்கலாம்.
10- இரகசியத்தைப் பாதுகாப்பது மார்க்கத்தின் நடைமுறையாகும்.
11- நபி(ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் சொர்க்கத்துப் பெண்களின் தலைவியாக இருப்பார்கள். முஃமினான பெண்களின் தலைவியும் அவர்கள்தான்.
12- நபி(ஸல்) அவர்கள் தமது மகள் ஃபாத்திமா மீது அதிக அன்பும் அக்கரையும் செலுத்தியது போல் நாமும் நம்முடைய பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கரையும் காட்ட வேண்டும். நபியவர்களைப் போல் நாமும் நமது பிள்ளைகளுக்கு பேருபகாரம் செய்ய வேண்டும். அவர்களை நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர்க்க வேண்டும். அவர்களுக்கு நல்லொழுக்கமுள்ள துணைகளைத் தேர்வு செய்து மணமுடித்து வைக்கவும் வேண்டும்.
13- நபியின் குடும்பத்தாரில் நபியவர்களுக்குப் பிறகு முதன் முதலில் மரணமடைந்தவர் ஃபாத்திமா (ரலி) அவர்களே ஆவர்.
இந்தப் பாடங்களை நாம் வாழ்வில் நடைமுறைப்படுத்த ஒ நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment