بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

வீராணம் மஸ்ஜித் ஆயிஷா திறப்பு

               கடந்த 14.12.2011 அன்று வீராணம் ஆயிஷா  பள்ளிவாசல் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டு அல்லாஹ்விற்காக அர்ப்பணிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


 
           முபாரக் பள்ளிவாசல் கமிட்டி தலைவர் க.அ.சேகுதுமான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மவ்லவி எஸ்.ஏ.பசீர் அஹ்மத் உமரீ அவர்கள் இந்த பள்ளிவாசல் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டது. இதை நிர்வகிக்கின்றவர்களின் லட்சணம் எப்படி இருக்கவேண்டும் என்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளிவாசலின் சாவியை இப்பள்ளி உருவாவதற்கு மூல காரணமாக இன்று வரை திகழ்கின்ற பெரியவர் சம்சுத்தீன் அவர்களிடம் க.அ.சேகுதுமான் அவர்கள் வழங்கினார்.
            கிட்டத்தட்ட 18 இலட்ச ரூபாய் அளவிற்கு கடையநல்லூர் முபாரக் மற்றும் அக்ஸா ஜமாஅத்தினர்களால்  இத்தொகை சகோ. பீர் ஒலி அவர்களிடமிருந்து பெறப்பட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment