بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தஃவாவுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம்

                          அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால், 11.12.2011 அன்று காலை சரியாக 9.30 மணியளவில் தவ்ஹீத் சகோதரர்களின் தஃவாவுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் சகோ. வி.எம்.டி. நஸீர் ஹுஸைன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

               திருச்சி பாலக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்டிற்குச் சொந்தமான தவ்ஹீத் பள்ளிவாச­லில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் மன்னார்குடி அமீர் ஹம்ஸா, என். அலி     ­ அக்பர் உமரீ, இப்றாஹீம் காசிமி, எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மவ்லவி எஸ்.ஏ. பஷீர் அஹ்மத் உமரீ அவர்கள் தக்வா குறித்து மார்க்கச் சொற்பொழிவாற்றினார். மன்னார்குடி அமீர் ஹம்ஸா அவர்கள் இவ்வொருங்கிணைப்பு தேவையா, இல்லையா என்பதைக் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.
                     அதைத் தொடர்ந்து பதிமூன்றுக்கும் மேற்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் டிஎன்டிஜேயினரால் அடைந்த பாதிப்புகளையும் டிஎன்டிஜேயினர் மார்க்கத்திற்கு முரணாக நடந்து கொள்வதையும் எடுத்துரைத்தனர்.
                  இறுதியில் தொகுப்புரை நிகழ்த்திய மவ்லவி இப்றாஹீம் காசிமி அவர்கள் தன்னுரையில் ....இன்னும் இது போன்று பாதிக்கப்பட்ட நிறைய ஊர்கள், நிறுவனங்கள், சகோதரர்கள் உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து நம்முடன் இணைத்துக் கொண்டு தஃவா பணி செய்வதற்கு உரிய கால அவகாசம் தேவை. இன்ஷா அல்லாஹ், 29.04.2012ல் மீண்டும் ஒரு கூட்டத்தைக் கூட்டி நாம் எப்படிச் செயல்படுவது என்று முடிவு செய்து கொள்ளலாம். அது வரை மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் தற்காலி­க கமிட்டியை ஏற்படுத்துவது தஃவாவுக்காக பிரச்சாரகர்கள் தேவைப்படுவோர் சகோ. . வி.எம்.டி. நஸீர் ஹுஸைன், மன்னார்குடி அமீர் ஹம்ஸா ஆகிய இருவரையும் தொடர்பு கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார்.
                  நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திருச்சி பாலக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
          தொடர்புக்கு :  நஸீர் ஹூஸைன் , (9443112344), திருச்சி,  அமீர் ஹம்ஸா (9942941190) , மன்னார்குடி











Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment