بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

மஸ்ஜித் முபாரக் - ஹஜ் பெருநாள் தொழுகை.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக் கமிட்டி சார்பில் நபிவழியில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை 7-11-2011 (திங்கள் கிழமை) அன்று மஸ்ஜிதுல் முபாரக் முன்பு உள்ள மெயின் பஜார் திடலில் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக கடையநல்லூரில் எந்த ஒரு மாநிலம் தழுவிய அமைப்பையும் சாராமல் இயங்கி வரும் மஸ்ஜித் முபாரக் – யின் மூலமாக ஹஜ் பெருநாள் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது.
அதன் அடிப்படையில்ல் அன்று காலை 6 மணியிலிருந்தே சாரை சாரயாக ஆன்களும் பென்களும் வரத்துவங்கினர், கடையநல்லூர் ஜேடிஐ ஒருங்கிணைப்பாளரான மவ்லவி எஸ்.எஸ்.யூ. ஸைஃபுல்லாஹ் ஹாஜா பைஜி அவர்கள் மக்களுக்கு பெருநாள் பேருரை நிகழ்த்தினார் அவர் தனது உரையில் ஹஜ்ஜுப் பெருநாள் என்பது நபி இப்ராஹிம் (அலை) அவா;களின் தியாகத்தை நினைவு கூர்ந்து நடத்தப்படுகின்ற ஓர்இறைவணக்க வழிபாடு ஆகும்.மேலும் இப்ராஹிம் (அலை) அவர்கள் தனி ஒரு மனிதராக நின்று ஏகத்துவ (தவ்ஹீத்) பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார் அந்த தவ்ஹீதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று உரையில் குறிப்பிட்டார் மேலும் இந்தப் பெருநாள் தொழுகையில் மூன்றாயிரத்து ஐநூறுக்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மஸ்ஜித் முபாரக் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
இதுபோல் மஸ்ஜிதுல் அக்ஸாவின் சார்பாக கடையநல்லூர் பேட்டை ரைஸ் மில் திடலில் ஜேடிஐ பேச்சாளார் முஹிப்புல்லாஹ் உமரி கலந்து குத்பா பேருரை நிகழத்தினார். இதில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மஸ்ஜிதுல் அக்ஸா நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

















Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment