அல்லாஹ்வின் கிருபையால், 15.10.2011(சனிக்கிழமை) அஸர் தொழுகைக்குப் பின் ஹஜ் செய்ய இருப்போருக்கு ஹஜ், உம்ரா விளக்க வகுப்பு மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டித் தலைவர் க.அ. சேகுதுமான் அவர்கள் தலைமையில் மஸ்ஜிதுல் முபாரக் வளாகத்தில் உள்ள நஜாஹ் நர்ஸரியில் நடைபெற்றது. வந்திருந்த ஹஜ் பயணிகளுக்கு மஸ்ஜிதுல் முபாரக் சார்பாக தயார் செய்யப்பட்டிருந்த ஹஜ், உம்ரா விளக்கக் குறிப்பேடு வழங்கப்பட்டிருந்தது. சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் ஹஜ், உம்ரா செய்யும் முறைகளை விளக்கி அவர்களுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்தார். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து விளக்கம் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்.









0 comments:
Post a Comment