بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

ரியாத் அஸீஸியாவில் எம்எம்ஜே மாதாந்திரக் கூட்டம்

                  ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டம் 21.10.2011 (வெள்ளிக்கிழமை) அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சவூதி நேரம் 12.30 மணியளவில் அல்ராஜ் அகாமடேஷனில் உள்ள பள்ளிவாச­ல் நடைபெற்றது. மவ்லவி அஹ்மத் கபீர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மவ்லவி எஸ்.ஏ.பஷீர் அஹமத் உமரீ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

                இக்கூட்டம் கடையநல்லூர் எம்எம்ஜே சகோதரர்களால் அஸீஸியா கேம்ப் பள்ளிவாச­ல் நடைபெறுவது வழக்கம். அவ்வாறே அங்கேயே நடத்துவதற்கு அப்பள்ளியின் பொறுப்பாளர் பாஷா பாய் அவர்களிடம் அனுமதி பெறப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட டிஎன்டிஜே ரியாத் மண்டல தலைவர் பைசல் முஹம்மத் அவர்கள் பாஷா பாய் அவர்களைத் தொடர்பு கொண்டு எந்த அடிப்படையில் எம்எம்ஜே கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கலாம் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். (இவர்தான் எம்எம்ஜே பொறுப்பாளர் இஸ்மாயீல் மற்றும் மவ்லவி அஹமத் கபீரிடம் நீங்கள் எம்எம்ஜேவிலும் இருந்து கொள்ளுங்கள். டிஎன்டிஜேவிலும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் இப்பொழுதே நான் டிஎன்டிஜே தலைமைக்கு போன் செய்து கடையநல்லூர் டிஎன்டிஜே டவுண் கிளைத் தலைவர் அய்யூபைப் பொறுப்பி­ருந்து நீக்கி விடச் சொல்கிறேன். ஏனென்றால் அவரே சேமலெப்பை இஸ்மாயீலும் செல் திவானும் பொறுப்புக்கு வந்து விடுவார்கள் என்பதற்காகத்தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் என்றெல்லாம் தெரிவித்தவராவார்) அவர் பயந்து போய் எம்எம்ஜே பொறுப்பாளர் ஓட்டை இஸ்மாயீலை தொடர்பு கொண்டு தயவு செய்து உங்கள் கூட்டத்தை  வேறு இடத்தில் நடத்திக் கொள்ளுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். இவர் உருதைத் தாய் மொழியாகக் கொண்டவராவார்.
                 21.10.2011 அன்று எம்எம்ஜேயின் கூட்டம் அஸீஸியா கேம்ப் பள்ளிவாச­ல் நடைபெறும் என்று 12.10.2011 அன்றே நமது இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த டிஎன்டிஜே மண்டல நிர்வாகிகள் பொறுத்துக் கொள்ள முடியாமல் தடாலடியாக 14.10.2011 அன்று அதே இடத்தில் டிஎன்டிஜே கூட்டத்தை நடத்தினார்கள். இக்கூட்டத்தில் கனி என்கிற நபரைத் தவிர மற்ற அனைவரும் அஸீஸியா பகுதியில் சம்பந்தம் இல்லாதவர்கள். அஸீஸியா டிஎன்டிஜே கிளை உயிருடன் இருக்கிறது என்பதற்காக வெளியிடங்களி­ருந்து டிஎன்டிஜேயைச் சார்ந்தவர்கள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு கூட்டம் காட்டப்படுவதற்கு நடத்தப்பட்டது என்றே அப்பகுதியினர் பேசிக் கொள்கிறார்கள்.
             மவ்லவி ­ எஸ்.ஏ.பஷீர் அஹமத் உமரீ அவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் எம்எம்ஜேக்கு ஆதரவாக அங்காடிமங்கலம். சங்கராபுரம். திருச்சி மணப்பாறை. நெல்­க்குப்பம் சகோதரர்களும் கலந்து கொண்டார்கள். சொன்னிமுஹம்மதுகனி ஹாஜா மைதீன். ஓட்டை இஸ்மாயீல். கம்புளி ஹாஜா மைதீன், கலங்காத்தன் அப்துல் அஜீஸ்  உட்பட 16க்கும் மேற்பட்ட கடையநல்லூர் எம்எம்ஜே சகோதரர்களும் கலந்து கொண்டார்கள். மார்க்க உரைக்குப் பிறகு கலந்து கொண்டவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மவ்லவி  எஸ்.ஏ.பஷீர் அஹமத் உமரீ அவர்கள் பதிலளித்தார்கள்.
              இன்ஷா அல்லாஹ். மாதாந்திரக் கூட்டம் வழக்கம் போல் அஸீஸியா கேம்ப் பள்ளிவாச­ல் தொடர்ந்து நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.





Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment