கடையநல்லூர் கலந்தர் மஸ்தான் தெரு (தக்வா) தெருவில் அமைந்துள்ள அரசு இஸ்லாமியர் மாணவியர் விடுதியும் தக்வா பள்ளிவாசலும் அமைந்துள்ளது. இப்பகுதி நகராட்சியில் அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்பதால் குடிநீர் குழாயும் தார்ச்சாலையும் அமைக்கப்படவேண்டும் என்று பல மாதங்களாக முபாரக், தக்வா பள்ளிவாசல்கள் ஜமாஅத்தினரால் முன்வைக்கப்பட்டிருந்தது.
சென்ற மே சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே அதற்கான டெண்டர் விடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. என்ன காரணத்தினாலோ வேலை நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டது.
கடந்த 09.09.2011 வெள்ளிக்கிழமை மாலை எம்எம்ஜே தலைவர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ், செயலாளர் முஹம்மது கோரி, ஜேடிஐ தலைவர் டிஎம். ஜபருல்லாஹ் மற்றும் பொறியாளர் எஸ்.எஸ்.ஜபருல்லாஹ் ஆகியோர் நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து தார்ச்சாலைப் பணியையும் குடிநீர் இணைப்பு வழங்கல்களையும் துரிதப்படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அதனடிப்படையில் தலைமைப் பொறியாளர், உதவிப் பொறியாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் பேட்டை சேட் ஆகியோரை அழைத்து தார்ச்சாலைப் பணியை துரிதப்படுத்தவேண்டுமென்று ஆணையாளர் கேட்டுக் கொண்டார். நமது சந்திப்பிற்குப் பின்னர் தார்ச்சாலை அமைக்கும் பணி சனிக்கிழமையிலிருந்து முடுக்கி விடப்பட்டுள்ளது. அல்லாஹ்விற்கே அனைத்துப் புகழும்.

0 comments:
Post a Comment