بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

MMJ சார்பாக ஏழைகளுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் நிகழ்ச்சி

                          மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் (MMJ) சார்பாக ஏழைகளுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் நிகழ்ச்சி மெயின் பஜார் நஜாஹ் நர்ஸரியில் வைத்து 13.08.2011 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. MMJயின் தலைவர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
                   முபாரக் பள்ளி நிர்வாகக் கமிட்டி தலைவர் க.அ. சேகுதுமான், ஜேடிஐ தலைவர் டிஎம். ஜபருல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் ஏழைகளுக்குக் கதர் மற்றும் கிராம தொழிற்துறை அமைச்சர் ராஜா பி. செந்தூர்பாண்டியன் அவர்கள் வழங்கினார்கள்.  இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்களிடத்தில் பொதுமக்கள் சார்பாக கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில்
1. கடையநல்லூர் மக்களின் நீண்ட நாள் வேட்கையும் கோரிக்கையுமான கடையநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வட்டம் (தாலுகா) அமைக்க வேண்டும்.
2. தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கவேண்டும்.
3. கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு பருவ காலத்திலும் வருடந்தோறும் டெங்கு மற்றும் இனம் புரியாத வைரஸ் மூலம் காய்ச்சல் பரவுகிறது. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கு நிரந்தர தீர்வாக பாதாளச் சாக்கடை திட்டத்தை அமுல்படுத்தவேண்டும்.
4. கடையநல்லூர் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட 21.46 கோடி குடிநீர் திட்டத்தைத் தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்.
5. கடையநல்லூர் மக்களின் எரிபொருள் தேவையை காலங்கடத்தாமலும் அவர்களை அலைக்கழிக்காமலும் எரிவாயு சி­ண்டர்களை விநியோகிப்பதற்கு இன்னொரு ஏஜென்ஸிக்கு உடனடியாக ஏற்பாடு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
        இறுதியில் ஜேடிஐ செயலாளர் முஹம்மது கோரி அவர்கள் நன்றியுரை கூறிய பின் துஆவுடன் நிறைவுற்றது.










மாற்றுத் திறனாளி சகோ. சுல்தான் அவர்களுடைய கோரிக்கை மனுவைப் அமைச்சர் பெற்றுக் கொள்கிறார்.
                           
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment