بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

கடையநல்லூரைத் தொடர்ந்து திருச்சி பாலக்கரை டிஎன்டிஜே நீக்கம்(மீண்டும் ஒரு 19)

அன்புள்ள கொள்கைச் சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
                கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திருச்சி பாலக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்டுக்குச் சொந்தமான பள்ளிவாசல் மற்றும் நிர்வாகத்திற்கும் டிஎன்டிஜே திருச்சி மாவட்டம், மாநிலத்திற்கும் இடையே பனிப் போர் நடைபெற்று வந்தது. அதன் இறுதிக் கட்டமாக 19.08.2011 திருச்சி சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளிவாசலில் எம்.ஐ.சுலைமானுடன் தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்டின் டிரஸ்டிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் எம்.ஐ.சுலைமான் என்பவர் தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்டிற்குச் சொந்தமான பள்ளிவாசலை டிஎன்டிஜேவிற்கு எழுதித் தரவேண்டும் என்று கடையநல்லூர் பாணியிலேயே கேட்டுக் கொண்டார். அதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் டிரஸ்டின் டிரஸ்டிகள் உடன்படாத காரணத்தினால் பாலக்கரை டிஎன்டிஜே கிளை ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்டது. இதைத் கேள்விப்பட்ட பீமநகர் டிஎன்டிஜே கிளையினர் தங்களது கிளையை கூண்டோடு கலைத்து விட்டனர்.

                                                                                                            தொடரும்......
Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment