بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 08.07.2011 (வெள்ளிக்கிழமை) அன்று ரகுமாநியாபுரம் 2வது தெருவில்  மாலை மஃரீப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
      அதில் முதலில் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் பராஅத் இரவு  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,
          பிறகு உரை நிகழ்த்திய சகோ.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் "வட்டி"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், அதில் நமது சமுதாயம் வட்டி என்ற கொடுமையில் எந்த அளவிற்கு மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பதனையும் அதனால் மறுமையில் எப்பேற்பட்ட தண்டனைகளை சந்திக்க நேரிடும்  என்பதனையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் அளித்தார்கள்.
மேலும் மஸ்ஜித் முபாரக் - யின் மூலம் நடத்தப் படும் வட்டியில்லா கடன் திட்டம் பற்றியிம் விளக்கம் அளித்தார்கள். அதில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டதுடன் பெண்களும் தங்களது வீட்டில் இருந்து கேட்டு தெளிவடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

















Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment