கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா செந்தூர்பாண்டியன் அவர்களை 15.06.2011 (புதன்) அன்று அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக KNID சார்பாக எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ், டி.எம்.ஜபருல்லாஹ், முஹம்மது காசிம், ஈகேஎம்எஸ். பாவா, எஸ்.எஸ்.யூ.சேகனா, மன்சூர் ஆகியோர் சந்தித்தனர். அவருக்கு KNID சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
டெண்டர் விடப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள 19ஆம் வார்டில் புதிய சாலை அமைப்பு, குடிநீர் விநியோகக் குழாய் பதிப்பு போன்றவற்றை உடனடியாக நடைமுறைப் படுத்தவேண்டும் என்று கேட்டுக் கொண்டவுடன் அவர் நகராட்சி ஆணையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வயுறுத்தினார்.
கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமீப நாட்களாக பரவி வரும் விஷக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிரந்தரத் தீர்வாக பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல வருடங்களாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்யவேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. பொதுமக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதை உடனுக்குடன் நம் கவனத்திற்கு கொண்டு வந்தால் முடிந்த அளவிற்கு சரிசெய்து தருகின்றேன் என்று தெரிவித்தார்.

0 comments:
Post a Comment