அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 28.06.2011 ( செவ்வாய்) அன்று இக்பால் நகர் பெண்கள் பள்ளி ( தெப்பக் குளம்) அருகில் மாலை மஃரீப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அதில் முதலில் சகோ.முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ” மெஹ்ராஜ் இரவு ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணம் செய்த மெஹ்ராஜ் பயணம் பற்றியும் அதில் நடந்த நிகழ்வுகள் பற்றியும் விளக்கிக் கூறினார்கள். மேலும் அதனைக் கொண்டு தற்போது நடைபெறும் பித்அத் - னால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் விளக்கமளித்தார்கள்.
பிறகு உரை நிகழ்த்திய சகோ.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் "வட்டி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள், அதில் நமது சமுதாயம் வட்டி என்ற கொடுமையில் எந்த அளவிற்கு மூழ்கிக் கிடக்கிறார்கள் என்பதனையும் அதனால் மறுமையில் எப்பேற்பட்ட தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்பதனையும் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் அளித்தார்கள்.
மேலும் மஸ்ஜித் முபாரக் - யின் மூலம் நடத்தப் படும் வட்டி யில்லா கடன் திட்டம் பற்றியிம் விளக்கம் அளித்தார்கள். அதில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டதுடன் பெண்களும் தங்களது வீட்டில் இருந்து கேட்டு தேளிவடைந்தார்கள். இஷா பாங்கிறகு பிரகு நிகழ்ச்சி இனிதே நிறைவிற்றது அல்ஹம்துலில்லாஹ்.
















0 comments:
Post a Comment