بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

அடையாளம் தெரியாத உடல் கண்டெடுப்பு

           27.05.2012 ஞாயிறு அன்று காலை சுமார் 10 முதல் 11 மணிக்குள் அடையாளம் தெரியாத உடல் கிடப்பதாக ரயில்வே போ­ஸிற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் விரைந்து சென்று சடலத்தை கடையநல்லூருக்கும் பாம்புக்கோவில் சந்தைக்குமிடையே ரயில்வே தண்டவாளத்திற்கு அருகில் கண்டெடுத்தனர். அது கண்டெடுக்கப்பட்டது முதல்         கடையநல்லூர் மருத்துவமனையின் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது.
                   தகவல் கிடைத்ததும் எம்எம்ஜேயைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பல சகோதரர்கள் அங்கு குழுமினர். அவ்வுடலைப் பார்த்த போது கத்னா செய்யப்பட்ட அடையாளம் காணப்படுகிறது. இவர் தென்காசியில் 26, 27. 05.2012 இரு நாட்கள் நடைபெற்ற தப்லீக் இஜ்திமாவிற்கு வந்தவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
             அங்கு பாதுகாப்புக்கு நின்ற ரயில்வே போ­ஸிடம் விசாரித்த போது நாங்கள் எல்லா காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். நீங்களும் உங்கள் ஜமாஅத்தார்களிடம் தெரிவித்து எங்களுக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார். எனவே இப்புகைப்படத்தைப் பார்க்கின்ற சகோதரர்கள் இதன் அடையாளம் தெரிந்தாலோ அல்லது வெளியூர் சென்றவர் தகவல் இல்லை. காணாமல் போய் விட்டார் என்ற அடிப்படையில் உங்களுக்கு செய்தி கிடைத்தால் உடனடியாக எங்களுக்குத் தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.





Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment